×

ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் புரோமோஷனுக்கு எதிர்ப்பு: பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வன்முறை

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த பதான் திரைப்படத்தின் புரோமோஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இருந்து அண்மையில் வெளியான பேஷரம் ரங் பாடல் சர்ச்சைக்குள்ளானது. பாடலில் தீபிகா படுகோன் கவி நிற உடை அணிந்திருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பதான் படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகம் ஒன்றில் பதான் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு சென்ற பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பதான் படத்தின் போஸ்டர்களை, பதாகைகளையும் கிழித்து எரிந்து வன்முறையில் ஈடுப்பட்டனர். பேஷரம் ரங் பாடலில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதால் பதான் படத்தை திரையிட கூடாது என்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வணிக வளாகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பதான் படத்தின் போஸ்டர்களை கிழித்து எரிந்தும் வன்முறையில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 


Tags : Shah Rukhan , Shah Rukh Khan, Pathan, Movie, Promotion, Protest, Bajrang Dal, Violence
× RELATED காவி நிறத்தில் பிகினி காட்சிகள்;...